/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் 'ஹின்ஸ்பைர் -- 2025' விழா
/
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் 'ஹின்ஸ்பைர் -- 2025' விழா
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் 'ஹின்ஸ்பைர் -- 2025' விழா
ஹிந்துஸ்தான் கல்லுாரியில் 'ஹின்ஸ்பைர் -- 2025' விழா
ADDED : மார் 27, 2025 12:17 AM

போத்தனூர்; கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள ஹிந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்களுக்கான கலைவிழா 'ஹின்ஸ்பைர் -- 2025', நேற்று கல்லூரி அரங்கில் நடந்தது.
ஹிந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். தனி, குழு நடனம், பாட்டு, பேச்சு, பெயின்டிங், நெருப்பின்றி சமையல், புகைப்படம் எடுத்தல், ஆங்கில கவிதை, ரங்கோலி, மெகந்தி உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன.
தொடர்ந்து, சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, தனது 'வீர தீர சூரன்' படத்தின் விளம்பரத்திற்காக வந்த நடிகர் விக்ரம் பேசுகையில், அனைவரும் கனவு காணுங்கள். அக்கனவை நனவாக்க, கடினமாக உழைக்க வேண்டும். உயர்ந்த எண்ணங்களோடு செயல்படவேண்டும், என்றார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னதாக டீன் அனந்தமூர்த்தி வரவேற்றார். ஹிந்துஸ்தான் கல்வி குழும செயலாளர் பிரியா, யமுனா, முதல்வர்கள் ஜெயா, நடராஜன் மற்றும் 5,000க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.