/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.எம். கல்லுாரியில் வரலாற்று ஆய்வரங்கம்
/
என்.ஜி.எம். கல்லுாரியில் வரலாற்று ஆய்வரங்கம்
ADDED : அக் 15, 2025 11:41 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லுாரியில், மகாலிங்கம் தமிழாய்வு மையம், வாணவராயர் பவுண்டேஷன், சிற்பி அறக்கட்டளை சார்பில் வரலாற்றரங்கம் நடந்தது.
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிர்வாக தலைவர் சங்கர் வாணவராயர் முன்னிலை வகித்தார். என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன் வரவேற்றார். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அறிமுக உரையாற்றினார்.
புதுச்சேரி இந்தியவியல் துறை, புதுச்சேரி பிரஞ்ச் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சுப்ராயலு, 'நகரமும், அய்நுாற்றுவரும்,' என்ற தலைப்பிலும், தமிழக அரசின் தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குனர் பூங்குன்றன், 'வரலாற்று போக்கில் கொங்குச் சமூகம்' என்ற தலைப்பிலும் பேசினர்.
திருச்சி முனைவர் ராசமாணிக்கனார், வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் கலைக்கோவன் ஆகியோர், ஆடல் கானீரோ என்ற தலைப்பிலும் ஆய்வுரை வழங்கினர்.
தமிழக அரசின் தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் முனைவர் ராஜன், அகழாய்வுகள் கூறும் தமிழ்நாட்டு வரலாறு என்ற தலைப்பிலும், சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், தொல் இசை நட்ட குடி என்ற தலைப்பிலும் பேசினர்.
கொங்கு நாட்டில் நிகழ்த்தப்பெற்ற அகழாய்வுகள், கிடைத்த பொருட்கள், தொல்லியல் ஆய்வில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை காலக்கணிப்பு செய்து அதன் காலத்தை கண்டறியும் முறைகள், நடுகற்கள், ஈமக்குழிகள், அவற்றில் இருந்து கிடைத்த பொருட்கள் குறித்து விளக்கினர்.