/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாறை குழியில் கழிவு குவிப்பு: சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
/
பாறை குழியில் கழிவு குவிப்பு: சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
பாறை குழியில் கழிவு குவிப்பு: சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
பாறை குழியில் கழிவு குவிப்பு: சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
ADDED : அக் 15, 2025 11:44 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கோதவாடி செல்லும் ரோட்டோரம் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டிருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு - கோதவாடி செல்லும் ரோட்டில் இருந்து, கோடங்கிபாளையம் செல்லும் இணைப்பு ரோட்டின் அருகே பாறைக்குழி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், பாறைக்குழியில் நீர் தேங்கி நிற்கிறது.
தற்போது, இந்த பாறைக்குழியின் ஒரு பகுதியில் அதிகளவில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இதர கழிவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் அசுத்தமடைவதுடன், துர்நாற்றம் வீச அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர், பாறைக்குழியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் கூறியதாவது:
பொதுவாக பாறைக்குழியில், குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுவதில்லை. பெரிய நிறுவனங்களின் கழிவு அத்துமீறி இரவு நேரத்தில் கொட்டப்படுகிறது.
இதே பாறை குழியில் தனியார் நிறுவன கழிவு கொட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கழிவு கொட்ட துவங்கியுள்ளனர். இதை அதிகாரிகள் கவனித்து குப்பை உள்ளிட்ட கழிவு கொட்டும் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.