/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாடு தழுவிய மறியல் போராட்டத்தில் பங்கேற்க எச்.எம்.எஸ்., சங்கம் முடிவு

ADDED : பிப் 12, 2024 11:59 PM
கோவை;விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 16ம் தேதி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க, எச்.எம்.எஸ்., சங்கம் முடிவு செய்துள்ளது.
கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம்(எச்.எம்.எஸ்.,) சார்பில், தியாகி என்.ஜி.ராமசாமியின் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சிங்காநல்லுாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது.
எச்.எம்.எஸ்., மாநில செயலாளர் ராஜாமணி, சங்க செயலாளர்(பொ) மனோகரன் உள்ளிட்டோர் என்.ஜி.ஆர்., உருவ படத்துக்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வரும், 16ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடக்கிறது.
இதில், கோவை மாவட்டத்தில் ஐந்து மையங்களில் நடக்கும், மறியல் போராட்டத்தில் சங்கம் சார்பில் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. மதியம் சவுரிபாளையத்தில் உள்ள மனவளம் குன்றிய, ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.