/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹாக்கி உலக கோப்பைக்கு இந்துஸ்தானில் வரவேற்பு
/
ஹாக்கி உலக கோப்பைக்கு இந்துஸ்தானில் வரவேற்பு
ADDED : நவ 22, 2025 06:58 AM

கோவை: கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரிக்கு வந்த, ஹாக்கி உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்கள் ஜூனியர்பிரிவு, 2025ம் ஆண்டு ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள், சென்னை மற்றும் மதுரையில் வரும், 28 முதல் டிச., 10ம் தேதி வரை நடக்க உள்ளன.
இப்போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை முதல் கன்னியாகுமரி வரை, இந்த உலகக் கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
நவஇந்தியா இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரிக்கு வந்த உலகக் கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லுாரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா ஆகியோர் மாணவர்களின் பார்வைக்காக அரங்கில் வைத்து, இந்திய அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்காக இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் பரதநாட்டியம், சிலம்பாட்டம் மூலம், வாழ்த்து தெரிவித்தனர்.

