/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
/
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
ADDED : டிச 08, 2025 05:46 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பிரைடு அரிமா சங்கம், ஒமேகா ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, பல்லடம் ரோடு கே.கே.ஜி., மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கண்காட்சியை நகராட்சித்தலைவர் சியாமளா, முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் பிரைடு அரிமா சங்கத்தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இங்கு, குழந்தைகளை பரவசப்படுத்தும் வண்ண மீன்கள் கண்காட்சி, '12 டிவீஆர் ஷோ' உள்ளன.
ஸ்ரீபொன்முத்து வழங்கும் பர்னிச்சர் மேளாவில் சோபா, பீரோ, கட்டில் உள்ளிட்டவை தள்ளுபடி விலையில் அளிக்கப்படுகிறது.
புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கான ஆடைகள், ஆட்டோ எக்ஸ்போ, வீட்டுமனை விற்பனை மற்றும் வங்கிகளின் லோன் மேளாவும் அமைக்கப்பட்டுள்ளது. இன்றே கடைசிநாள் என்பதால் மக்கள் கண்காட்சியைக் கண்டு ரசிக்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

