/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருந்தவரின் ரூ.1.2 கோடியை திருடிய வீட்டு உரிமையாளர் கைது
/
குடியிருந்தவரின் ரூ.1.2 கோடியை திருடிய வீட்டு உரிமையாளர் கைது
குடியிருந்தவரின் ரூ.1.2 கோடியை திருடிய வீட்டு உரிமையாளர் கைது
குடியிருந்தவரின் ரூ.1.2 கோடியை திருடிய வீட்டு உரிமையாளர் கைது
ADDED : ஆக 26, 2025 12:27 AM

வடவள்ளி:
கோவையில், குடியிருந்தவரின் வீட்டை திறந்து, 1.2 கோடி ரூபாயை திருடிய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை, கணுவாய், டி.வி.எஸ்., நகரை சேர்ந்தவர் வேல்முருகன், 43; டெய்லர். வடவள்ளி, ஐடியல் ஹோம்ஸ் பகுதியில், இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. சில மாதங்களுக்கு முன், பிரியா, 58 என்பவருக்கு, 11 மாதம் லீசுக்கு கொடுத்தார்.
பிரியா, அவரது மகள் வசிக்கின்றனர். இரு நாட்களுக்கு முன், பிரியா தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்து, 1.20 கோடி ரூபாயை வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம், பிரியா, அவரது மகள் வெளியே சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பியபோது, 1.20 கோடி ரூபாய் காணாமல் போயிருந்தது.
அவரது புகாரில், அருகில் உள்ள வீட்டில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் சோதித்தபோது, பணத்தை, வேல்முருகன் திருடிச் சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, 1.20 கோடி ரூபாயை போலீசார் மீட்டனர்.
போலீசார் கூறுகையில், 'கடன் பெறுவதற்காக வீட்டின் உள் அறைகளை போட்டோ எடுப்பதற்காக, பிரியா குடியிருக்கும் வீட்டிற்கு வேல்முருகன் சென்றுள்ளார். வீடு பூட்டியிருந்ததால், இன்னொரு சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, 'பேக்'கில் இருந்த 1.20 கோடியை பார்த்ததும் திருடிச் சென்றுள்ளார்' என்றனர்.