/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாலிபரை 'அமுக்கிய' உரிமையாளர்
/
வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாலிபரை 'அமுக்கிய' உரிமையாளர்
வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாலிபரை 'அமுக்கிய' உரிமையாளர்
வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட வாலிபரை 'அமுக்கிய' உரிமையாளர்
ADDED : மார் 30, 2025 11:12 PM
கோவை; கோவை, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு மாசாணி அம்மன் நகரை சேர்ந்தவர் கனகராஜ், 64. இவர் கடந்த, 26ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் பெங்களூரு சென்றார். நேற்று அவர் மட்டும் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவர், பின் பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். சிறிது நேரத்தில், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவருக்கு போன் செய்து, 'உங்கள் வீட்டை இருவர் நோட்டமிட்டு, சுற்றி வருகின்றனர்' என தெரிவித்தனர்.
உடனே வீட்டுக்கு திரும்பிய கனகராஜ், இருவர் வீட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றதை பார்த்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை மடக்கி பிடித்தார். மற்றொருவர் தப்பி விட்டார். பிடிபட்ட நபரிடம், கதவை உடைக்க கூர்மையான ஆயுதங்கள், இரும்பு ராடு ஆகியவை இருந்தன. வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
பிடிபட்ட நபரை, துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சித்தாபுதூர் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன், 30 என்பதும், வீட்டில் ஆட்கள் இல்லாததால் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்ததும் தெரிந்தது.
போலீசார் ஜெகநாதனை சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய துடியலூர் செங்காளிபாளையத்தை சேர்ந்த முபாரக் அலி, 35 என்பவரை தேடி வருகின்றனர்.