/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு கவுரவம்
/
துாய்மை பணியாளர்களுக்கு கவுரவம்
ADDED : ஜன 02, 2025 10:27 PM

பெ.நா.பாளையம்; நாயக்கன்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களின் பணித்திறனை பாராட்டி பொன்னாடை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
வரும், 5ம் தேதி ஊராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதை ஒட்டி பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, நாயக்கன்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி பிரியா சந்துரு ஜெகவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சின்னராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், நாயக்கன்பாளையம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானதாக இருந்தது என்று நினைவு கூர்ந்து, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நாயக்கன்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில், நாயக்கன்பாளையம் ஊராட்சி செயலாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.