/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்
/
சிறந்த மாணவர்களுக்கு விருதுகளுடன் கவுரவம்
ADDED : பிப் 10, 2025 11:40 PM

கோவை; லிஸ்யு சி.எம்.ஐ., சர்வதேசப் பள்ளியில் 'லியோரா-2025' விருது வழங்கும் விழா நடந்தது. மாகாண அருட்தந்தை சாஜூ சக்காலக்கல் பிரேசிதா புரோவின்ஸ் தலைமை வகித்தார்.
இதில், யு.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் சுப்பிரமணியம், பார்க் பொறியியல் கல்லுாரி முதல்வர் லட்சுமணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கலை, விளையாட்டில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர்.
பள்ளி தாளாளர் அருட்தந்தை சாஜூ வர்கீஸ், முதல்வர் அருட்தந்தை பிலிப்ஸ் பொந்தேக்கன், லிஸ்யு பதின்ம மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் அருட்தந்தை ஜோய் அறக்யல், பள்ளியின் பொருளாளர் அருட்தந்தை ஜெய்சன் வேலுக்காரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராம் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

