/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 18, 2025 07:07 AM

கோவை; கோவை மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர் கலைச்செல்வியிடம் சங்கத்தினர் வழங்கினர்.
சங்கத்தின் மண்டல தலைவர் சுப்பையா கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில், 7,374 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். குறைந்த ஊதியம், பாதுகாப்பின்மை, உள்ளிட்ட சூழலிலும், கல்லுாரி மாணவர்கள் நலன் சார்ந்து இயங்கி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், உயர் கல்வித்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறோம்.
பணிநிரந்தரம், யு.ஜி.சி., யின் அடிப்படை ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு, வழங்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். உயர்நீதிமன்றமும் எங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வழங்கச் சொல்லி தீர்ப்பளித்துள்ளது. எங்களின் நீண்ட கால கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

