ADDED : பிப் 14, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
காரமடை: மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள், நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கல்லுாரியில் 1,300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 45 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 37 பேர் கவுரவ விரிவுரையாளர்கள். இந்நிலையில், கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்த ரூ.57,700 ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், காலவரையற்ற போராட்டம் நடக்கிறது.
