/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த ஆசிரியர்களை பாராட்டி கவுரவம்
/
சிறந்த ஆசிரியர்களை பாராட்டி கவுரவம்
ADDED : ஜன 07, 2025 07:14 AM

கோவை; பிச்சனுார், ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ், ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஜெ.சி.டி., பாலிடெக்னிக், ஜெ.சி.டி., கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அறக்கட்டளையின் சார்பில், சிறந்த ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், விருது வழங்கும் விழா, ஜெ.சி.டி., பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்களின் செயலாளர் துர்கா சங்கர் தலைமை வகித்தார்.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். நிகழ்வில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த, 175 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஜெ.சி.டி., அறக்கட்டளை அறங்காவலர் அனுராதா, கல்லுாரியின் முதல்வர்கள் மனோகரன், அன்பரசு, தாமோதரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.