/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையில் தேங்கும் மழைநீர் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
/
சாலையில் தேங்கும் மழைநீர் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
சாலையில் தேங்கும் மழைநீர் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
சாலையில் தேங்கும் மழைநீர் நிரந்தர தீர்வு காண எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:46 PM
பொள்ளாச்சி : மழையின் தாக்கம் அதிகரித்தால், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி சாலைகளில் தண்ணீர் தேக்கமடைவதால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. குறிப்பாக, வால்பாறை, உடுமலை, பல்லடம் நோக்கிய முக்கிய வழித்தடங்களில் சில பகுதிகளில், சாலையின் நடுவிலேயே மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது.
அதிலும், சூளேஸ்வரன்பட்டி, பல்லடம் ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலையில் கழிவுநீருடன் மழைநீர் வழிந்தோடியதால், வாகன ஓட்டுநர்கள், திணறியவாறு வாகனங்களை இயக்கினர். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சாலையில் மழைநீர் தேங்குவதை கண்டறிந்து, அங்கு வடிகால் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: மழையின் தாக்கம் அதிகரித்தால், பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரோட்டை ஒட்டி, மழைநீர் வடிகால் அமைப்பு முறையாக கிடையாது. தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக, சீரான போக்குவரத்தும் தடைபடுகிறது.
துறை ரீதியான அதிகாரிகள், சாலையில் மழைநீர் தேக்கமடைவதை ஆய்வு செய்ய வேண்டும். பின், தண்ணீர் வெளியேறும் வகையில், சாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.