ADDED : செப் 14, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
கோவை: பொருட்களை கொண்டு செல்லுதல், குதிரை சவாரி, ரைடிங் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படும் அனைத்து குதிரையினங்களையும் வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ய, உள்ளாட்சி அமைப்பிடம் தேவையான உரிமம் பெற்றிருக்க வேண்டும். விலங்குகளை கொடுமைப்படுத்துதல் அல்லது அலட்சியமாக பராமரித்தல் குறித்த வழக்குகள் இருக்கக்கூடாது.
குதிரைகள் மற்றும் அவை தங்கும் இடங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். உரிமை, அடையாள ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என, கால்நடை மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
பதிவு செய்வது தொடர்பான விவரங்களுக்கு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம்.
