செம்மொழி பூங்காவை பராமரிக்க தோட்டக்கலை அதிகாரி நியமனம்
செம்மொழி பூங்காவை பராமரிக்க தோட்டக்கலை அதிகாரி நியமனம்
ADDED : ஜன 31, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
காந்திபுரம்: காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உள்ளது. 23 தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 2,000 வகை தாவரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. அரிய வகை மரங்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.
இவற்றை உருவாக்கிய மாநகராட்சி அதிகாரிகள், திறப்பு விழா முடிந்ததும் இதர பணிகளை கவனிக்க சென்று விட்டனர். கண்காணிப்பு, பராமரிப்பில் கோட்டை விட்டால் தாவரங்கள் பட்டுப்போய் புதர்மண்டி விடும் என்பதால், அனுபவம் மிகுந்த அதிகாரியை நியமிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பரிந்துரைத்தார்.
அதையேற்று, விருத்தாச்சலம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வித்யா கோவைக்கு மாற்றப்பட்டார். அவர், செம்மொழி பூங்காவில் பொறுப்பேற்றார்.
