/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு; கோவையில் கண்காட்சி இன்று துவக்கம்
/
தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு; கோவையில் கண்காட்சி இன்று துவக்கம்
தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு; கோவையில் கண்காட்சி இன்று துவக்கம்
தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு; கோவையில் கண்காட்சி இன்று துவக்கம்
ADDED : பிப் 06, 2025 09:49 PM
கோவை; கோவை கொடிசியா வளாகத்தில், யு.டி.எப்.ஐ., நிறுவனம் சார்பில் தோட்டக்கலை-கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிப்பண்ணை சிறப்பு கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை சார்ந்த தொழில்நிறுவனங்கள், விவசாயிகள், ஸ்டார்ட் அப் உட்பட, 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல், பல்வேறு தொழில்நுட்பங்கள், மாடித்தோட்ட அமைப்பு முறை, தோட்டக்கலை சார்ந்த உபகரணங்கள், குளிரூட்டும் சாதனங்கள் என பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.
வேளாண் பல்கலை தோட்டக்கலை பிரிவு டீன் ஐரின் வேதமணி இந்நிகழ்வை துவக்கிவைக்கவுள்ளார். அனுமதி இலவசம் அனைவரும் பங்கேற்கலாம். மூன்று நாள் கண்காட்சி, 9ம் தேதி நிறைவு பெறும்.