/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் நோய் பாதிப்பு தோட்டக்கலை துறையினர் ஆய்வு
/
தென்னையில் நோய் பாதிப்பு தோட்டக்கலை துறையினர் ஆய்வு
தென்னையில் நோய் பாதிப்பு தோட்டக்கலை துறையினர் ஆய்வு
தென்னையில் நோய் பாதிப்பு தோட்டக்கலை துறையினர் ஆய்வு
ADDED : மே 17, 2025 02:31 AM

அன்னுார் : நோய் பாதித்த தென்னந்தோப்புகளில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அன்னுார் வட்டாரத்தில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகளிலும், அதை ஒட்டியுள்ள இலுப்ப நத்தம் ஊராட்சியிலும் தென்னையில் நோய் பாதிப்பு ஏற்பட்டு பரவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் கடந்த 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கோமதி, தோட்டக்கலை அலுவலர் மோனிகா, உதவி தோட்டக்கலை அலுவலர் சந்தியா ஆகியோர் பகத்துார் மற்றும் குப்பனுார் ஊராட்சியில் தென்னைத்தோப்புகளை நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில் தென்னைகளை, கருந்தலை புழு தாக்கி உள்ளதை கண்டறிந்தனர். இதுகுறித்து அதிகாரிகள், விவசாயிகளிடம் கூறுகையில், 'மிகவும் பாதிக்கப்பட்ட அடிமட்ட இலைகளை மரத்திலிருந்து மூன்றடி விட்டு வெட்டி எடுத்து எரித்து விட வேண்டும். இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை, விளக்கு பொறி வைத்து அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, கவர்ந்து, அழிக்கலாம். கருந்தலைப்புழு தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது ஏக்கருக்கு 2,100 பிரக்கானிட் ஒட்டுண்ணிகள் அல்லது ஏக்கருக்கு 1,400 பெத்திலிட் ஒட்டுண்ணிகளை விட வேண்டும்.
மருந்து செலுத்தப்பட்ட மரங்களில் இருந்து 45 நாட்களுக்குப் பிறகே அறுவடை செய்ய வேண்டும்.
இது அதிக அளவில் பரவாமல் இருக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்,' என தெரிவித்தனர்.