/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளுக்கு திசு வாழைக்கன்றுகள் வினியோகம் பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
/
விவசாயிகளுக்கு திசு வாழைக்கன்றுகள் வினியோகம் பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு திசு வாழைக்கன்றுகள் வினியோகம் பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
விவசாயிகளுக்கு திசு வாழைக்கன்றுகள் வினியோகம் பயன்பெற தோட்டக்கலைத்துறை அழைப்பு
ADDED : ஜன 21, 2024 11:45 PM

ஆனைமலை;'ஆனைமலையில் திசு வாழைக்கன்றுகள், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது,' என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்தார்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை மற்றும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. அதில், தமிழ்நாடு வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தில் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில், வாழைக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது: ஆனைமலை தோட்டக்கலைத்துறை சார்பில், தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
தோட்டக்கலைத்துறை வாயிலாக, நீர்பாசனத்தில் புதிய திட்ட உத்திகளை செலுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கிட உதவும் புதிய பயிர்கள் மற்றும் ரகங்கள் அறிமுகம் செய்து, வேளாண்மையை நவீனப்படுத்திக்கொண்டுள்ளது.
இத்திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு கிராமங்களான மார்ச்சநாயக்கன்பாளையம், பெரியபோது, ஒடையகுளம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம், கோட்டூர், சோமந்துறை மற்றும் தென்சங்கம்பாளையம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இக்கிராமங்களில் பிரதான பயிரான தென்னையில், ஊடுபயிராக ஜாதிக்காய், திசுவாழை வழங்கப்பட உள்ளது.
நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் நிலப்போர்வை போன்ற உயர் தொழில் நுட்பத்தின் வாயிலாக நீர் மேலாண்மை, களை மேலாண்மை, கூலி மேலாண்மை கட்டுக்குள் கொண்டு வரப்பெற்று, விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கச்செய்கிறது.
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், 5.7 லட்சம் இலக்கு பெறப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
திசு வாழை, 72 ெஹக்டேரும், ஜாதிக்காய், 65 ெஹக்டேரும், நுண்ணீர் பாசன திட்டம், 24 ெஹக்டேரிலும் செயல்படுத்தப்பட உள்ளது. நிலப்போர்வை, நான்கு ெஹக்டேரும் பெறப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாயிகள் நலன் கருதி தோட்டக்கலைத்துறை வாயிலாக வாழைக்கன்றுகள் தற்போது வழங்கப்படுகின்றன.
விவசாயிகள், சிட்டா அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் மற்றும் உரிமைச்சான்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
உழவன் செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.