/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் தோட்டக்கலை விழா
/
வேளாண் பல்கலையில் தோட்டக்கலை விழா
ADDED : ஜூலை 18, 2025 09:46 PM
கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஹார்ட்டி உத்சவ் எனும் தோட்டக்கலை விழா நடந்தது.
நிலத்தில் தொடங்கி அறுவடை வரை, தோட்டக்கலை சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் கொண்டாடப்பட்டன.
மாநிலம் முழுதும் தோட்டக்கலை கல்லூரிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்று, 21 விதமான பண்பாட்டுப் போட்டிகளில் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
புதிய தோட்டக்கலை மாதிரிகளுடன் கூடிய கண்காட்சி நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த செங்குத்து தோட்ட மாதிரிகள், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பக் கருவிகள், மதிப்புக் கூட்டலுக்கான பதப்படுத்தும் அலகுகள், நிலையான நீர்ப்பாசன மாதிரிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், தோட்டக்கலை டீன் வெங்கடேசன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.