/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டக்கலை துறை திறன் மேம்பாடு பயிற்சி
/
தோட்டக்கலை துறை திறன் மேம்பாடு பயிற்சி
ADDED : ஜூலை 27, 2025 11:12 PM
கோவை; தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வெற்றி நிச்சயம் என்ற பெயரில் வழங்கப்படும் இப்பயிற்சியில் பங்கேற்று பயனடைய, 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சொட்டு நீர்ப்பாசன கள உதவியாளர், தாவர நாற்றங்கால் உதவியாளர், பசுமைக் குடில் மேலாளர், தேனீ வளர்ப்பு வழிமுறைகள், உயிர்ம வேளாண்மை சாகுபடியாளர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
https://candidate.tnskill.tn.gov.in/skillwallet என்ற இணையதளம் வாயிலாக விண் ணப்பிக்கலாம். இத்தகவலை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

