ADDED : டிச 04, 2024 10:07 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை இணைந்து, தலைமை அரசு தலைமை மருத்துவமனையில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்து பணியை துவக்கி வைத்தார்.
மாணவர்கள் ஒன்றிணைந்து, மருத்துவமனை வளாகத்தில் தீவிர சிகிச்சை, காப்பீடு திட்டம், குழந்தைகள் நலம், மகப்பேறு என பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை சுத்தம் செய்தனர்.
அதேநேரம், மருத்துவமனை வளாகத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்கவும், சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என, நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இருப்பிட மருத்துவஅலுவலர் மாரிமுத்து, தேசிய மாணவர் படை தலைவர் சித்திரை செல்வன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர்கள் பேரவை தலைவர் நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.