தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ-பாஸ் நடைமுறையால் விடுதி உரிமையாளர்கள் கவலை

 இ-பாஸ் நடைமுறையால் விடுதி உரிமையாளர்கள் கவலை

 இ-பாஸ் நடைமுறையால் விடுதி உரிமையாளர்கள் கவலை


ADDED : மார் 20, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், இ-பாஸ் நடைமுறையால் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலையடுத்து, வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். இந்நிலையில் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் வால்பாறையில் சுற்றுச்சுழலை பாதுகாக்க சென்னை உயர்நீதி மன்றம் கடந்த ஆண்டு நவ., மாதம் முதல் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக, சுற்றுலா பயணியர் இ-பாஸ் பெற்ற பின் தான் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது, விடுமுறை நாட்களில், தினமும், 750 சுற்றுலா வாகனங்களும், பிற நாட்களில் 500 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

தங்கும்விடுதி உரிமையாளர்கள் கூறியதாவது:

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் தங்கி செல்ல வசதியாக, 150க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

தற்போது, இ-பாஸ் நடைமுறைக்கு பின் கோர்ட் உத்தரவு படி சுற்றுலா வாகனங்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், வால்பாறையில் சுற்றுலா பயணியர் வருகையும் குறைந்துள்ளதோடு, தங்கும் விடுதிகளும் காலியாக உள்ளன. எனவே, வால்பாறையின் சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில், சுற்றுலா பயணியர் வழக்கம் போல் வந்து செல்ல கோர்ட் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us