/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலக்காடு அருகே வயலில் தரையிறங்கிய வெப்ப பலுான்
/
பாலக்காடு அருகே வயலில் தரையிறங்கிய வெப்ப பலுான்
ADDED : ஜன 16, 2025 11:49 PM

- - நமது நிருபர் -
பாலக்காடு அருகே எரிபொருள் தீர்ந்ததால், பலுான் வயலில் தரையிறங்கியது.
தமிழக சுற்றுலாத்துறை, குளோபல் மீடியா பாக்ஸ் சார்பில், 10வது தமிழ்நாடு சர்வதேச வெப்ப பலுான் திருவிழா, பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் கடந்த 13ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.
அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, வியட்நாம், பெல்ஜியம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து, 12 பலுான்கள் இந்தத் திருவிழாவிற்காக வந்துள்ளன. இந்த நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை, வானில் பறந்த வைப்ப பலுான்களில் ஒன்றில், எரிபொருள் தீர்ந்ததால், பாலக்காடு மாவட்டம் வடவன்னுார் வட்டச்சிறை என்ற பகுதியில் உள்ள உதயன் என்பவரின் வயல் நிலத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த பலூனில் வெளிநாட்டைச் சேர்ந்த பைலட்டும், சென்னையைச்சேர்ந்த தாயும் மகளும் இருந்தனர். பின் தொடர்ந்து வந்த வாகனத்தில் பலுானை ஏற்றி திரும்பிச்சென்றன.
திருவிழாவின் துவக்க நாளிலும், இதேபோல் எரிபொருள் தீர்ந்து வெப்ப பலுான் பாலக்காடு மாவட்டம் பெருமாட்டி கன்னிமாரி முள்ளன்தோடு என்ற பகுதியில் உள்ள ராமன்குட்டி என்பவர் வயல் நிலத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.