/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டாட்டத்திற்கு தயாராகும் விடுதிகள்; வனத்துறையினர் கண்காணிக்கணும்
/
கொண்டாட்டத்திற்கு தயாராகும் விடுதிகள்; வனத்துறையினர் கண்காணிக்கணும்
கொண்டாட்டத்திற்கு தயாராகும் விடுதிகள்; வனத்துறையினர் கண்காணிக்கணும்
கொண்டாட்டத்திற்கு தயாராகும் விடுதிகள்; வனத்துறையினர் கண்காணிக்கணும்
ADDED : டிச 23, 2024 09:59 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வனப்பகுதி அருகிலுள்ள தனியார் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பேரில், அத்துமீறல் தொடர்ந்தால், அதனைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில், தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த சுற்றுலாப் பயணியர், அதிகளவில் வருகை புரிகின்றனர்.
இந்நிலையில், புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், சிறப்பான கொண்டாட்டத்துக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் வருகின்றன. குறிப்பாக, சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக இரவு நேர கொண்டாட்டம் நடத்த திட்டமிடப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியையொட்டி தனியார் தங்கும் விடுதிகளில், கொண்டாட்டம் என்ற பெயரில், 'பார்ட்டி' நடத்தப்படும். இரவு நேரத்தில், சுற்றுலாப் பயணியர் சிலர் அத்துமீறலில் ஈடுபட வாய்ப்புள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும், 31ம் தேதி மற்றும் ஜன., 1ம் தேதி, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க, போலீசார் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வர்.
ஆனால், வனப்பகுதி ஒட்டிய விடுதிகளில், இரவு நேர விழாக்களில் கலந்து கொள்ளவே, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்வது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இதனை தடுக்கும் வகையில், கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.