/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் கசிவால் வீடு சேதம்; நிவாரண உதவி வழங்கல்
/
மின் கசிவால் வீடு சேதம்; நிவாரண உதவி வழங்கல்
ADDED : ஜூலை 03, 2025 09:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு டேம் குடியிருப்பு பகுதி. இங்குள்ள சத்யா காலனியில் வசிக்கும் சிவா என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் மின் கசிவு ஏற்பட்டதில், தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அணைத்தனர்.
தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை சேதமானதோடு, வீட்டினுள் இருந்த பொருட்களும் சேதமாயின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர் இந்துமதி, முன்னாள் கவுன்சிலர் செல்வம் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினர்.