/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : நவ 04, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கவுண்டம்பாளையம் நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர்மணிகண்டன், 38. கடந்த, 1ம் தேதி விடுமுறை என்பதால், வீட்டை பூட்டி விட்டு, சோமனுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து, 2ம் தேதி வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்தார். வீட்டு அலமாரியில் இருந்து ஆறே முக்கால் பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை, மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
மணிகண்டன் கவுண்டம்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களை, தேடி வருகின்றனர்.

