/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ஊதியக்குழுவிடம் ஓய்வூதியர்கள் எதிர்பார்ப்பு
/
புதிய ஊதியக்குழுவிடம் ஓய்வூதியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 04, 2025 12:20 AM
கோவை: புதிய 8வது ஊதியக்குழு, பழைய ஓய்வூதியதாரர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என, தமிழக ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கம் பொருளாளர் நாகராஜன் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. அதே போல், ஓய்வூதியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்குவது வழக்கம்.
மத்திய அரசால் புதிய 8 வது ஊதியக்குழு அமைக்கப்பட்டு, இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெயர்களை, 10 மாதத்துக்கு பிறகு வெளியிட்டுள்ளனர்.
இந்த 8 வது ஊதியக்குழுவில், பழைய ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் குறித்து குறிப்போ, தகவலோ இல்லை. பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் பலன்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது. புதிய 8வது ஊதியக்குழு, பழைய ஓய்வூதியதாரர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

