/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பெண் மாயம்
/
திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் பெண் மாயம்
ADDED : நவ 04, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:  சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்த, 22 வயது இளம்பெண் படித்து முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை இளம்பெண்ணின் தந்தை கண்டித்து, பழக்கத்தை கைவிடும் படி கூறினார். தொடர்ந்து இளம்பெண்ணுக்கு திருமண  ஏற்பாடுகளை துவங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும், கிடைக்காததால் தந்தை சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

