/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் முன்னோடிகள் திட்டம்: விண்ணப்பித்தோருக்கு பயிற்சி
/
தொழில் முன்னோடிகள் திட்டம்: விண்ணப்பித்தோருக்கு பயிற்சி
தொழில் முன்னோடிகள் திட்டம்: விண்ணப்பித்தோருக்கு பயிற்சி
தொழில் முன்னோடிகள் திட்டம்: விண்ணப்பித்தோருக்கு பயிற்சி
ADDED : நவ 04, 2025 12:19 AM
கோவை: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு, மாவட்ட தொழில் மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக அரசால் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக, மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
திட்டத்தில் விண்ணப்பிக்கும் முறை, அதன் நடைமுறை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பெறும் கடன் தொகைகளை முறையாக எப்படி பயன்படுத்துவது, மேற்கொள்ளும் தொழிலில் லாபம் வரக்கூடிய வழிகள், அடுத்த கட்டத்துக்கான திட்டம் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 31 பேர் பங்கேற்றனர்.
திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரண்யா, மனோஜ்குமார், பிரபாகர் ஆகியோர், இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

