ADDED : ஜன 20, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
காரமடை: காரமடை வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், சுகாதாரத்துறையினர் இரண்டாம் கட்டமாக வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதார துறையினர் கூறுகையில், 'காரமடை வட்டாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட தொழுநோய் பரிசோதனையில் புதிதாக 3 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 84 குழுக்களுடன் மீண்டும் இப்பணி இன்று முதல் (19ம் தேதி) துவங்கியுள்ளது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறும்' என்றனர்.
