/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா
/
பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா
ADDED : நவ 17, 2025 01:07 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மன்னம், நவமலை பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, நவமலை பழங்குடியின குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு, நெல்லித்துறை மன்னம் பகுதியில் வீடு கட்டித்தர இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
எம்.பி. ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் பவன்குமார், சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, நகராட்சித்தலைவர் சியாமளா முன்னிலை வகித்தனர். பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'மன்னம், நவமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மொத்தம், 51 பேருக்கு, தலா ஐந்து லட்சம் மதிப்புள்ள வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.மேலும், ஒரு நபருக்கு தலா, 5.7 லட்சம் ரூபாய் வீதம், வீடு கட்ட மொத்தம், 2.58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

