தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு ஊழியர்கள் 12டி படிவம் சமர்ப்பிப்பது எப்படி?

 அரசு ஊழியர்கள் 12டி படிவம் சமர்ப்பிப்பது எப்படி?

 அரசு ஊழியர்கள் 12டி படிவம் சமர்ப்பிப்பது எப்படி?


ADDED : மார் 18, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர், தபால் ஓட்டு செலுத்தலாம். இதற்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் பணியில், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் சேர்த்து உத்தேசமாக, 20 ஆயிரம் பேர் பணிபுரிவர். இவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர்.

முதல் கட்டமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சென்று படிவம் 12டி வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள தென்னக ரயில்வே ஊழியர்கள், அகில இந்திய வானொலி நிலையம், இந்திய விமான நிலைய ஆணையம், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, மத்திய சிறைத்துறை, போக்குவரத்து போலீசார், தபால் ஓட்டு பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு துறைக்கும் நோடல் ஆபீசர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மூலமாக 12டி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us