/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி? அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
/
முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி? அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி? அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு எப்படி? அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
ADDED : நவ 01, 2024 10:39 PM
கோவை; கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரு நாட்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ஏற்பாடுகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை, தமிழக மின் வாரிய அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 5 மற்றும், 6ம் தேதிகளில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். டைடல் பார்க் வளாகத்தில் கூடுதல் கட்டடம் திறப்பு, கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழா, கலெக்டர் அலுவலகத்தில் தங்க நகை தொழில் அமைப்பினருடன் ஆலோசனை மற்றும் போத்தனுாரில் தி.மு.க., நிர்வாகிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; என்னென்ன செய்ய வேண்டும்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, மின்வாரிய அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஒவ்வொரு இடத்துக்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேயர் ரங்கநாயகி உட்பட பலர் உடனிருந்தனர்.