தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ செம்மொழி பூங்கா வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் எவ்வளவு?

 செம்மொழி பூங்கா வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் எவ்வளவு?

 செம்மொழி பூங்கா வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் எவ்வளவு?


ADDED : நவ 29, 2025 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: காந்திபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை, டிச., 1 முதல் பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுவர். பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.5, 'வாக்கிங்' செல்ல மாதாந்திர கட்டணம் ரூ.100 வீதம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதேபோல், வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம், ஜூன் மாதம் நடந்த மாமன்ற கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதில், ஒரு மணி நேரத்துக்கு இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ரூ.5, நான்கு சக்கர வாகனம் நிறுத்த ரூ.10, பஸ்கள் நிறுத்த ரூ.30 வீதம் கட்டணம் வசூலிக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், பொது ஏலம் கோரப்பட்டது. 17,000 சதுரடி பரப்புள்ள வாகன நிறுத்துமிடத்தில் கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம், ஆண்டுக்கு 90 லட்சம் ரூபாய்க்கு பொது ஏலத்தில் சென்றிருக்கிறது. 6,253 சதுரடியில் சுற்றுச்சூழல் உணவகம் நடத்துவதற்கு மாத வாடகை ரூ.23.35 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

குழந்தைகள் விளையாடுவதற்கு 14,000 சதுரடி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவ்விடத்தில் விளையாட்டு உபகரணங்கள் வைத்து, கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கான உரிமம் ரூ.33.40 லட்சத்துக்கு சென்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us