sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மக்கள் வரிப்பணம் எப்படி வீணாகிறது! மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலிகள் பராமரிப்பு பாருங்கள்

/

மக்கள் வரிப்பணம் எப்படி வீணாகிறது! மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலிகள் பராமரிப்பு பாருங்கள்

மக்கள் வரிப்பணம் எப்படி வீணாகிறது! மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலிகள் பராமரிப்பு பாருங்கள்

மக்கள் வரிப்பணம் எப்படி வீணாகிறது! மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலிகள் பராமரிப்பு பாருங்கள்


ADDED : அக் 04, 2024 11:44 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய சக்கர நாற்காலிகள், திறந்தவெளியில் வீணாகப் போடப்பட்டுள்ளன. அவை துருப்பிடித்து, பயனற்றுப் போவதற்கு முன், மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும்.

கோவை மாநகராட்சி சார்பில், 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட வந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, 100 எண்ணிக்கையில் சக்கர தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டன.

லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்த, 200 தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டன. ரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள தள்ளுவண்டிகளில், 54 மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன.

மீதமுள்ளவை பழுதடைந்திருக்கின்றன. லோக் சபா தேர்தல் பயன்பாட்டுக்கு வாங்கிய தள்ளுவண்டிகள், சித்தாபுதுார் பள்ளியில் உள்ளன.

இவற்றை உபயோகிக்கும் வகையில், மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், பொது சுகாதார ஆய்வகங்கள், மருந்தகங்கள், வீடற்றோர் தங்கும் விடுதிகள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறைக்கு வழங்க, மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அவை இன்னும் வழங்கப்படவில்லை.

ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், மழையிலும் வெயிலிலும் வீணாகி வருகின்றன.

கோவை மக்களின் வரிப்பணத்தில், லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வாங்கப்பட்ட இவை, பயனற்று பழைய இரும்பு கடைக்கு போடுவதற்கு முன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us