/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கால நோய்கள் தப்புவது எப்படி? சுகாதாரத்துறையினர் அறிவுரை
/
மழைக்கால நோய்கள் தப்புவது எப்படி? சுகாதாரத்துறையினர் அறிவுரை
மழைக்கால நோய்கள் தப்புவது எப்படி? சுகாதாரத்துறையினர் அறிவுரை
மழைக்கால நோய்கள் தப்புவது எப்படி? சுகாதாரத்துறையினர் அறிவுரை
ADDED : அக் 17, 2024 10:19 PM
பொதுவாக பருவ மழை, தொடர் மழை பெய்யும் காலங்களில் குளிர், காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், வேகமெடுக்கும். குறிப்பாக 'அனாபிலஸ்' கொசு கடிப்பதன் வாயிலாக மலேரியா காலரா மற்றும் டைபாயிட் சிக்-குன்-குனியா, வயிற்று தொற்று, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
மழைக்கால நோய்களை பொறுத்தவரை பெரும்பாலும் கொசு கடிப்பதன் வாயிலாக பரவுகிறது. வீட்டில் லார்வா, கொசு உருவாகாமல் தடுப்பதே முதல் முன்னெச்சரிக்கை.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்க வாழ்விடங்களை சுத்தமாக, உலர்வாக வைத்திருக்க வேண்டும். பிற பகுதியில் இருந்து கொசுக்கள் வருவதை, கடிப்பது தவிர்க்க கொசுவலை பயன்படுத்த வேண்டும்; கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.
மழைநீரில் நடக்கக்கூடாது. நீண்ட நேரம், கால்களை நீரில் நனைப்பதால், நீரில் முழ்கியபடி வைத்திருப்பதால், கழிவுநீர் கலந்த மழைநீரால் கால்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழை பெய்யும் நேரங்களில் அத்தியாவசிய தேவை தவிர மற்றவைக்கு வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
வெளியில் செல்பவர்கள் மூடிய காலணி, ரப்பர் செருப்புகளை அணிந்தால், கால்களுக்கு நீரில் பரவும் தொற்று மற்றும் காயங்களில் இருந்து பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுடுநீர் ஆறவைத்து குடியுங்கள்
அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: சுத்திகரிக்கப்பட்ட, நன்கு காய வைத்து ஆற வைத்த குடிநீரை குடிப்பது ஆரோக்கியமானது. மழைக்காலங்களில் இயன்றவரை சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதே நேரம், தெருவோர கடைகளில் உடனடியாக தயாரிக்கப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும். தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் வேளைகளில் இவற்றின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கும்.
வெளி உணவுகளை மழைக்காலங்களில் தவிர்ப்பது மிகவும் நல்லது. தடுப்பூசி செலுத்த வேண்டிய குழந்தைகள் இருப்பின், கட்டாயம் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
ஏனெனில், உடல்நலக்குறைவு ஏற்பாடுவோருக்கு, தடுப்பூசி முன்கூட்டியே செலுத்தாமல் இருந்தால், எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும்.
இயல்பாக உடலில் தண்ணீர் எடுக்கும் அளவு குறைவாக இருக்கும்; ஆனால், மழைகாலத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது உடலில் வறட்சியை ஏற்படுத்தும்.
எனவே, உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -