/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கத்தரியில் தேமல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை
/
கத்தரியில் தேமல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை
ADDED : ஆக 25, 2025 09:49 PM
கோவை; தேமல் நோய், அஸ்வினி பூச்சியால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது. இலைகளில் பச்சை, வெளிர் மஞ்சள் திட்டுகள் காணப்படும். இலைகள் சிதைந்து, ஒழுங்கற்ற வடிவில், தோல் போன்று காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களில் குறைந்த அளவே பூ பிடித்து காய் காய்க்கும்.
இதைத் தவிர்க்க, ஒரே வயலில் தொடர்ச்சியாக கத்தரி சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். தேமல் நோயால் பாதிக்கப்பட்ட வயலுக்கு அருகில் மீண்டும் நடவு செய்யக் கூடாது. வயலை, களைகள் இன்றி பராமரிக்கவும். தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரை அகற்றி, அப்புறப்படுத்த வேண்டும். 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை, வெர்டிசிலியம் லெகானி திரவத்தை இலை வழியாக தெளிக்கலாம். ரசாயன முறையில் கட்டுப்படுத்த, 10 லிட்., நீருக்கு 10 மில்லி இமிடாக்லோப்ரிட் கலந்து தெளிக்கலாம், என, தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.