ADDED : ஆக 18, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
கோவை: வின்சென்ட் சாலை மற்றும் கோட்டை மேடு செல்லும் சாலை சந்திப்பில், வாகனங்கள் அடிக்கடி உரசிக்கொள்கின்றன.
கோட்டைமேட்டில் இருந்து வின்சென்ட் சாலை வழியாக, ராஜவீதியை அடைய இது ஒரு சுலபமாக செல்லும் வழி. இதனால் காலையிலும், மாலையிலும் மக்கள் இவ்வழியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி செல்வோர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த சந்திப்பில் சிக்னலும் அடிக்கடி செயல்படாமல் இருப்பதால், இவ்விடத்தில் அனைத்து நேரங்களிலும் போக்குவரத்து போலீசார் பணியில் இருக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
