தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/எப்படிலாம் 'ஸ்கெட்ச்' போடுறாங்க!

எப்படிலாம் 'ஸ்கெட்ச்' போடுறாங்க!

எப்படிலாம் 'ஸ்கெட்ச்' போடுறாங்க!


UPDATED : அக் 08, 2026 09:54 PM

ADDED : அக் 08, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 09:54 PM ADDED : அக் 08, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: 'ரூ.2,000 செலுத்தினால் ஓராண்டுக்கு தினமும் ஒரு கிலோ அரிசி, அரிசி வேண்டாம் எனில், வாரம் ரூ.250க்கு மளிகைப் பொருட்கள்'

'படித்து வேலையில்லாத இளைஞர்கள் ரூ.1 லட்சம் கட்டினால் 99 வயது வரை மாதம் ரூ.30 ஆயிரம்'

'மளிகை பொருட்கள் வாங்குபவர்கள், தனது குடும்பத்தில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட எந்த வகையான செலவுகளுக்கான பில்களுக்கு 30 சதவீதம் செலுத்தினால் 100 நாட்களில் பில் தொகையுடன் பணமும் திரும்ப வழங்கப்படும்'

இப்படியும் நடக்குமா என எண்ணும் அளவுக்கு இருந்தன அந்த அறிவிப்புகள் ஆட்களை சேர்த்துவிட்டால் கூடுதல் கமிஷன் என்ற அறிவிப்பு வேறு.

சும்மா இருப்பார்களா நம் ஆட்கள். பலரும் இந்த அறிவிப்பில் மயங்கி பணத்தை செலுத்தியுள்ளனர். அப்புறம் என்ன, வசூலானது வரை லாபம் என, இரு மாதங்களில் ரூ.2 கோடி கல்லா கட்டிவிட்டு அலுவலகத்தை காலி செய்து கம்பி நீட்டிவிட்டார் அந்த நபர்.

திட்டம் ஒன்றில் ரூ.8000 ரூபாய் கட்டி ஏமாந்த சித்தாபுதுார் ஜார்ஜ் வில்லியம்ஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கும் போது தான் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமாந்தவர்கள் அடுத்தடுத்து புகார் அளித்து வருகின்றனர்.

காட்டூர் போலீசார் கூறுகையில், ' இப்படி அறிவிப்புகள் வரும் போதே உஷாராக வேண்டாமா. இப்படியும் ஏமாறுவார்களா என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. மோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த நடராஜை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தீபாவளி நேரத்தில் இதுபோன்ற சலுகை அறிவிப்புகள் பல வரும். மக்கள் கவனமாக இருக்கவேண்டும், ' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us