UPDATED : ஜூலை 11, 2026 05:27 PM
ADDED : ஜூலை 11, 2026 04:10 AM
தேவையான பொருட்கள் கால் கிலோ கட்டா மீன்ஒரு பெரிய வெங்காயம்நான்கு ஐந்து பச்ச மிளகாய்இரண்டு கொத்து கறிவேப்பிலைநான்கு ஐந்து வரமிளகாய்அரை ஸ்பூன் மஞ்சள் தூள்மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய்ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்புதேவையானஅளவு உப்புதேவையானஅளவு மல்லி இலைஇரண்டு மூன்று பல்பூண்டு (தட்டியது)நான்கு ஸ்பூன் தேங்காய் துருவல்ஒரு ஸ்பூன் சீரகம்ஒரு ஸ்பூன் சோம்புஒரு ஸ்பூன் மிளகு
செய்முறை : முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேவையான பொருட்களை பக்கத்தில் வைக்கவும். வெங்காயம் பச்ச மிளகாய் பொடியாக நறுக்கவும். பூண்டு தட்டிக் கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் சேர்க்காமல் சோம்பு, சீரகம்,மிளகு வெறும் கடாயில் வறுக்கவும். ஆற வைத்த பின் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.மற்றொரு கடாயில் மீன் மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின்பு முள் இல்லாமல் சதையை மட்டும் எடுத்து பிசைந்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு பொறிந்தவுடன் வெங்காயம் வதங்கியதும் பச்ச மிளகாய்,வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும்.வதங்கிய பின்பு மஞ்சள் தூள் பிசைந்து வைத்த மீனை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் அடிப்பிடிக்காமல் சிறிது நேரம் கலந்து விடவும். அதன் பின்பு அரைத்து வைத்த பொடியை சேர்த்து உதிரியாகும் வரை வதக்கவும்.வதங்கிய பின்பு துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும். அதில் கொஞ்சம் நறுக்கிய மல்லி இலை தூவி மூடி போட்டு வைக்கவும். இப்போது சுவையான மீன் புட்டு தயார்.
