/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை
/
வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை
வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை
வீடுகளுக்கு ரேஷன் வழங்குவது எப்படி? ஊழியர்களுக்கு அறிவுரை
ADDED : ஜூலை 30, 2025 08:56 PM
கோவை; கோவையில் மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவது எப்படி என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல ஏற்படும் சிரமத்தை போக்க, வீடு தேடிச் சென்று வினியோகிக்கும் திட்டம், ஆக., 15ல் துவக்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவை:
மாற்றுத்திறனாளிகள் மற்றும், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோர், குடும்ப உறுப்பினர் இருந்தால் இத்திட்டம் பொருந்தாது.
நகர்ப்புறத்தில், 70, கிராமப்புறத்தில், 60, மலைப்பகுதியில், 50 கார்டுதாரர்களுக்கு ஒரு நாளில் வழங்கும் வகையில் 'கிளஸ்டர்' உருவாக்க வேண்டும்.
முதல் நாளில், 70/ 60 கார்டுதாரருக்கு வழங்க வேண்டும். இரண்டாவது நாளில், 70/ 60 கார்டுதாரர்கள் இல்லாவிட்டால், அருகில் உள்ள கடைக்குரிய கார்டுதாரர்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
பொருட்களை எடுத்துச் செல்வதற்கான வாகனங்களை, தார் பாய் வசதியுடன் தயார்படுத்திக் கொள்ளவும். மழையில் பொருட்கள் நனைந்து விடக்கூடாது.
வாகனத்தில் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு லோடுமேன் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
பயனாளிகள் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாறிச் சென்றவர்கள் இருக்கிறார்களா என, முன்னரே சரிபார்த்து, அதற்கேற்ப 'ரூட் மேப்' தயாரிக்க வேண்டும்.
திட்டம் செயல்படுத்தும் நாளன்று, எவ்வித தடங்கல் மற்றும் விடுதல், புகாருக்கு இடமளிக்காத வகையில் விற்பனை செய்ய வேண்டும்.
விற்பனை முனைய இயந்திரம், தராசு மற்றும் பேட்டரி ஆகியவை நாள் முழுவதும் 'பேக்கப்' இருக்கும் வகையில், தயாராக வைத்திருக்க வேண்டும்.
தேவையான டேபிள், சேர் எடுத்துச் செல்ல வேண்டும். கார்டு தாரர்களை இருக்கையில் அமர வைத்து, 'பயோமெட்ரிக்' முறையில் மட்டுமே விற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

