தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்  பயனாளிகள் கணக்கெடுப்பு 

ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்  பயனாளிகள் கணக்கெடுப்பு 

ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டம்  பயனாளிகள் கணக்கெடுப்பு 


ADDED : ஜன 29, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : புதிதாக துவங்கப்பட்டுள்ள ஹெச்.பி.வி., தடுப்பூசி திட்டத்தின் கீழ்,பயனாளிகள்

பட்டியல் தொகுக்கும் செயல்பாடுகள், கோவையில் துவங்கவுள்ளன.

தேசிய அளவில் முதன்முறையாக, தமிழகத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி பெண் குழந்தைகளுக்கு செலுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 9 - 14 வயதுள்ள குழந்தைகள் இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள இயலும். முதல்கட்டமாக, அரியலுார், பெரம்பலுார், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள, 30,209 குழந்தைகள் பயனடையவுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் இரண்டாம் கட்ட பட்டியலில் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தேர்தல் சார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், இரண்டாம் கட்ட பட்டியலில் உள்ள மாவட்டங்களுக்கு ஜூன் மாதத்திற்கு பிறகே தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமியிடம் கேட்டபோது, ''கோவையில் சில மாதங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதற்கான பயிற்சிகள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அளிக்கவுள்ளோம். தவிர, 9 - 14 வயதுடைய பயனாளிகள் பட்டியல் தொகுக்கவுள்ளோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us