ADDED : ஏப் 01, 2026 04:48 AM

அ நிறம் | அளவு
கோவை: கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை நாளை சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குகிறது.
ஏப்.,2 அன்று காலை 7:05க்கு ஹூப்ளியில் 07347 எண் கொண்ட சிறப்பு ரயில் புறப்பட்டு; சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியாக கொல்லத்தை ஏப்.,3 காலை 7 மணிக்கு அடைகிறது.
ஏப்.,3 அன்று 07348 எண்கொண்ட சிறப்பு ரயில் காலை 10:45 க்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு ஏப்.,4 காலை 10:40 க்கு ஹூப்ளி சென்றடைகிறது.
இரண்டு மற்றும் மூன்றடுக்கு ஏசி ஸ்லீப்பர் வசதியும், பொது இருக்கை வசதியும் உள்ளது.
