/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
/
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
ADDED : அக் 03, 2025 09:47 PM

கோவை ; நவஇந்தியா, இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில், 'இந்துஸ்தான் கொலு' என்ற தலைப்பில் கொலு வைக்கப்பட்டது. இந்துஸ்தான் கல்வி குழும நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி துவக்கி வைத்தார்.
தமிழகத்தின் பழமை வாய்ந்த கோவில்கள், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் மற்றும் நல்வழிக்கதைகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. பிறந்த நாள், காதணி விழா மற்றும் வளைகாப்பு போன்ற விழாக்கள், மாதிரி கிராமம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், கொலு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்துஸ்தான் கல்வி நிறுவன செயலர் பிரியா, முதல்வர் செண்பகவல்லி, ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களின் பெற்றோரும் கொலுவை கண்டு ரசித்தனர்.