/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
/
இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்
ADDED : நவ 01, 2024 12:32 AM
கோவை : தீபாவளி பண்டிகையொட்டி, சினிமா தியேட்டர்கள், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை, நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று வழிபட்டு, குழந்தைகள் பட்டாசு வெடிக்க துவங்கினர். இறைச்சி கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகரிக்க துவங்கியது.
க.க.சாவடி உட்பட பல பகுதிகளில் இறைச்சி வாங்க, அதிகாலையிலேயே பலர் திரண்டனர். பல கிராமப்பகுதிகளில், 750ல் துவங்கிய ஒரு கிலோ மட்டன் விலை, நகரப்பகுதிகளில் 850 முதல் 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் வரத்து குறைவாக இருந்த நிலையில், கடந்த வார விலையை ஒப்பிடுகையில், சிறிதளவு விலையேற்றம் இருந்தது.
ரசிகர்கள் குஷி
தீபாவளியை முன்னிட்டு, நேற்று, புதிய படங்கள் வெளியாயின. கோவை பிராட்வே திரையரங்கில், 'பிளடி பெக்கர்' திரைப்படத்தை பார்க்க வந்த நடிகர்கள் கவின், கிங்ஸ்லி ஆகியோர், ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

