/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி
/
வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி
ADDED : ஏப் 19, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து, தொண்டாமுத்துார் பகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில், மனித சங்கிலி போராட்டம், உக்கடம் அன்புநகர் பகுதியில் நேற்று நடந்தது.
இதில், 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அணி வகுத்து நின்று, வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி, கோஷம் எழுப்பினர்.
இது குறித்து, தொண்டாமுத்துார் வடக்கு பகுதி எஸ்.டி.பி.ஐ., கட்சி தலைவர் முகமது காசிம் கூறுகையில், ''தேசம் முழுவதும் மக்களுடன் சேர்ந்து போராடி, இந்த வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெற போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.

