/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு வழிகாட்டிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்
/
மாணவர்களுக்கு வழிகாட்டிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்
மாணவர்களுக்கு வழிகாட்டிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்
மாணவர்களுக்கு வழிகாட்டிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்
ADDED : மார் 18, 2025 05:19 AM

கோவை : ரத்தினம் கல்விக் குழுமத்தில், 'ஆர்- டாக்ஸ்' என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் பங்கேற்ற, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், முன்னணி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள், பேராசிரியர்கள், வல்லுனர்கள், கல்வியாளர்கள் உரையாற்றினர்.
இதில், மாணவர்கள் எவ்வாறு முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பை பெறுவது, அதற்கு தேவையான திறன்கள், பணியில் நிர்வாகத்திறன், கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச தொழில் நிறுவனங்கள் எவ்வாறு இணைந்து, மாணவர்களின் அறிவை மேம்படுத்துவது என விளக்கம் அளிக்கப்பட்டது. ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் நாகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.