ADDED : ஜூலை 22, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஊழியர்களின் அயராத முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவதோடு, ஊழியர்களிடையே தோழமை மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வளர்க்கும் வகையில், மனிதவள வாரம் கொண்டாட்டத்தை நடத்தியது.
கடந்த ஜூலை 21ம் தேதி துவங்கிய, கொண்டாட்ட நிகழ்வு வரும் 27ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதனொரு பகுதியாக, வங்கியின் கோவை மண்டல அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம் சார்பில், ரேஸ்கோர்ஸ் சாலையில் 'வாக்கத்தான்' நடைபெற்றது.
இதில், வங்கியின் மண்டலத் தலைவர் ராஜ்குமார், பிராந்திய தலைவர் லாவண்யா மற்றும் கோவையில் உள்ள அனைத்து கிளை அலுவலர்கள், பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.