ADDED : மார் 08, 2024 01:25 AM
கடந்த, 33 ஆண்டுகளுக்கு, 'கெபாசிடர்' துறையில் பாலாஜி எலக்ட்ரானிக்ஸ் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம்,'ஹண்டர்' எனும் பிராண்டின் கீழ், 20 ஆண்டுகளுக்குமேலாக, கொசுத் தொல்லைகளுக்கு தீர்வாக பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
ஹண்டர் பிராண்டு ரீசார்ஜபுள் ஸ்வேட்டர் பேட் தயாரிப்பில், ரீசார்ஜபுள் பேட், தண்டர், ரூலர், மினி பேட், பிரீமியம் பேட் என ஏழு வித்தியாசமான ரகங்களில் வருகிறது.இந்த வரிசையில், ஹண்டர் மஸ்கிட்டோ கில்லர் மெசினுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த மெசினை, துாங்குவதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக ஆன் செய்ய வேண்டும். தரை மட்டத்திலிருந்து, 2.5 அடி உயரத்திற்கு மேல் மெஷினை வைப்பதுடன், அறை, இருளாக இருக்க வேண்டும். மெஷினின் விளக்கை தவிர மற்ற விளக்குகள் ஆப் செய்திருக்கவேண்டும்.
மெஷினை, பேன் மற்றும் ஏ.சி., க்கு முன்போ அல்லது நேர்கீழாகவே வைக்கவோ கூடாது. காலையில், ஆப் செய்த பின்பு, கடிகார சுற்றில், ட்ரேவை திறந்து இறந்த கொசுக்களை அகற்றலாம்.
- பாலாஜி எலக்ட்ரானிக்ஸ், பாப்பம்பட்டி ரோடு, கண்ணம்பாளையம். - 99407 12887
